தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது

1 mins read
e68e9772-7f75-4b34-835f-5cb85701763a
உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்துக்கும் இடையே இணைப்பு ரயில் சேவை வழங்கப்பட்டதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் அக்டோபர் 1ஆம் தேதியன்று ரயில் பழுதடைந்ததை அடுத்து, லென்டோர் நிலையத்தை நோக்கிச் செல்லும் ரயில்கள் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்குப் பிறகு மெதுவாகச் சென்றன.

இதன் விளைவாகப் பயணிகளின் பயண நேரம் 10 நிமிடங்கள் அதிகரிக்கும் என்று சமூக வலைத்தளத்தில் எஸ்எம்ஆர்டி மாலை 5.05 மணிக்குப் பதிவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, மாலை 5.13 மணிக்கு உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்துக்கும் உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்துக்கும் இடையே இணைப்பு ரயில் சேவை வழங்கப்படுவதாக அது தெரிவித்திருந்தது.

அதே போல உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்துக்கும் லென்டோர் நிலையத்துக்கும் இடையே இந்த இணைப்பு ரயில் சேவை வழங்கப்படுவதாக எஸ்எம்ஆர்டி கூறியிருந்தது.

மாலை 5.52 மணிக்கு ரயில் சேவை முழுமையாகச் செயல்படுவதாக எஸ்எம்ஆர்டி கூறியது.

லென்டோர் நிலையத்துக்கும் பேஷோர் நிலையத்துக்கும் இடையே ரயில் சேவைகள் தொடர்வதாகவும், மாலை 5.30 மணியிலிருந்து அவை கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்