சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் சமூகப் பணி, சமூக மேம்பாட்டுக்கான புதிய பள்ளியைத் திறக்கவிருக்கிறது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் புதிய பள்ளி அதன் கதவுகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவை மட்டும்தான் சமூகப் பணியில் இளங்கலைக் கல்வியை வழங்குகின்றன.
சிங்கப்பூரின் சமூகச் சேவைத் துறையில் பலர் கொஞ்ச காலத்துக்குப் பின் சோர்ந்துபோவதால் தொய்வு ஏற்படுவதாக சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல்வர் பேராசிரியர் ரோபி கோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அதன் சமூகப் பணித் திட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 250 மாணவர்களைச் சேர்க்கிறது.
சமூகப் பணி, சமூக மேம்பாட்டுக்கான புதிய பள்ளி கூடுதல் திறன்களை வளர்க்க உதவும் என்றும் மிக மிக முக்கியமான சமூகப் பணித் துறைக்கு இன்னும் கூடுதலாகப் பங்களிக்க உதவும் என்றும் பேராசிரியர் கோ குறிப்பிட்டார்.
புதிய பள்ளியில் பல்கலையின் நடப்பில் உள்ள மூன்று பகுதிநேர பாடமும் ஒரு முழுநேரப் பாடமும் கற்பிக்கப்படும்.
பகுதிநேர பாடத்திட்டங்களில் ஒவ்வோர் ஆண்டு ஜனவரியிலும் ஜூலையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
முழுநேர இளங்கலைப் பிரிவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் புதிய மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அல்கின் சிங்கப்பூர் (Allkin Singapore) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வின்சென்ட் இங் புதிய பள்ளியின் தலைவராக நியமிக்கப்படுவார்.
அல்கின் சிங்கப்பூர் அமைப்பு சிங்கப்பூர் பெரிய சமூகச் சேவை அமைப்புகளில் ஒன்று. இதற்குமுன் அது ஏஎம்கேஎஃப்எஸ்சி (AMKFSC) சமூகச் சேவைகள் என்று அழைக்கப்பட்டது.
புதிய பள்ளி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடனும் இணைந்து செயல்படும்.