தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் மனிதாபிமான முறைகளைப் பின்பற்ற ஆலோசனை

2 mins read
e717b657-1be2-4881-9674-dab96679bea2
நாய்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்தவேண்டாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது. - படம்: மதர்ஷிப்

நாய்களை வளர்ப்பதில் மனிதாபிமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி, முட்கம்பிகளைக் கொண்ட கழுத்துப் பட்டைகளைத் தவிர்க்குமாறும் ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.

புதிய ஆலோசனையை விலங்குநல மருத்துவச் சேவையும் (ஏவிஎஸ்) விலங்குவதை தடுப்புச் சங்கமும் இணைந்து உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னதிர்ச்சி, கழுத்தைக் குத்தும் கழுத்துப் பட்டைகளைத் தவிர்த்து மனிதாபிமான பயிற்சி முறைகளை பின்பற்ற ஆலோசனை வலியுறுத்துகிறது.

சனிக்கிழமை (ஜூலை 26) வெளியிடப்பட்ட ஆலோசனைக் குறிப்பில், இத்தகைய சாதனங்களைப் பயிற்சியளிக்கப் பயன்படுத்துவது நாய்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளைவிப்பதோடு, முறையாக அவை இயக்கப்படாவிட்டால் மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் இத்தகைய சாதனங்களைத் தாங்களாகவே பயன்படுத்துவதற்குப் பதிலாக நாய் பயிற்சி குறித்த ஆலோசனைக்கு ‘ஏவிஎஸ்’ அங்கீகாரம் பெற்ற பயிற்றுநரை அணுகலாம் என்று ஆலோசனை கூறுகிறது.

இந்த ஆலோசனையை தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

சனிக்கிழமை (ஜூலை 26) தெம்பனிஸ் பொலிவார்ட் பூங்காவில் நடைபெற்ற செல்லப் பிராணிகள் தினத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

நாய்களுக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கும் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கு பயிற்சி அளிப்பதில் உதவ அறிவியல் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டி ஆலோசனை வழங்குகிறது என்று நிகழ்ச்சியில் பேசிய டான் குறிப்பிட்டார்.

நாய்களுக்கு அதிக தீங்கிழைக்காத பயிற்சிப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“விரும்பத்தகாத நாய் பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்துவது கடைசி முயற்சியாக மட்டுமே இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற நிபுணர்கள் அல்லது ஒருவரின் மேற்பார்வையின்கீழ் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்று திரு டான் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்