வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை 12.30 மணி முதல் 2.30 மணி வரை ஜோகூர் பாருவிலிருந்து உட்லண்ட்ஸ் கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் திரும்பும் வாகனவோட்டிகள், இரண்டாவது இணைப்புப் பாலத்தை (Second Link) பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள், சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு வளாகத்தில் உள்ள கார் புறப்பாட்டுப் பகுதிகளை மூடி, மின்சார வேலைகளை மேற்கொள்ளவுள்ளதே இதற்குக் காரணம்.
இதனால், ஆகஸ்ட் 7 அன்று அதிகாலை 12.30 மணி முதல் 2.30 மணி வரை உட்லண்ட்ஸ் தரைவழிச் சோதனைச்சாவடி வழியாக ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வாகன ஓட்டிகள், இரண்டாவது இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இரண்டு நேரத்தில் சிங்கப்பூருக்கு வரத் திட்டமிடும் வாகனவோட்டிகள் இரண்டாவது இணைப்புப் பாலத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவார்கள் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.