கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு ஒப்பந்தம்: சிங்கப்பூர் பரிசீலனை

2 mins read
089c9b42-4899-48c5-bf20-06994ee26e3d
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஒப்பந்தத்தை அங்கீகரித்த 80க்கும் மேற்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மூன்றில் இரண்டு பங்கு கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தமான ஐநா கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு ஒப்பந்தம் (UN High Seas Treaty) ஜனவரி 17ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்த நிலையில், ஒப்பந்தத்தின் கடமைகளை நிறைவேற்றும் வகையில், சிங்கப்பூர் தனது தற்போதைய சட்டங்களையும் கொள்கைகளைய்உம் மறுபரிசீலனை செய்து வருகிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், கடல்சார், கப்பல் நடவடிக்கைகள், ஆழ்கடல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இதில் அடங்கும் என்று பெருங்கடல் கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் சிங்கப்பூரின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான தேசிய சட்டம், ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளை சிங்கப்பூர் மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியுறவு அமைச்சு, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. இதுகுறித்து அமைச்சு கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் என்று முறையாக அழைக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாத்தல் ஒப்பந்தத்தை அங்கீகரித்த 80க்கும் மேற்பட்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

எந்தவொரு நாட்டின் கட்டுப்பாட்டிற்கும் வெளியே அமைந்துள்ள ஆழ்கடல்கள், உலகின் மிகப்பெரிய குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடமாகக் குறிப்பிடப்படுகின்றன. சட்டவிரோத மீன்பிடித்தல், மாசுபாடு, வனவிலங்கு கடத்தல் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த ஆழ்கடலில், ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான பகுதி மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையொப்பமிட்ட நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது. இது கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளை மேற்கொள்கிறது.

ஆழ்கடல்வாழ் உயிரினங்கள் குறித்த அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்து கிடைக்கும் ஆதாயங்கள் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை வகுக்கிறது. வளரும் நாடுகள் கடல் ஆராய்ச்சியிலும் அதன் பாதுகாப்பிலும் முழுமையாக பங்கேற்க உதவுகிறது.

சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளுக்கும் வலுவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கட்டமைப்பை சிங்கப்பூர் கொண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“பொதுவாக, சிங்கப்பூரில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் போக்குவரத்து, பொதுச் சுகாதாரம், பாரம்பரியம், சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை நிவர்த்தி செய்யும் முழுமையான மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”

இருப்பினும், சிங்கப்பூர் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், செயல்பாடுகள் தொடர்பான ஒப்பந்தத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய, அவை வளர்ச்சி தொடர்பானதாகவோ அல்லது வேறுவிதமாகவோ இருக்கலாம். அத்தகைய நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான சாத்தியமான கூறுகளைத் தீர்மானிக்க இங்குள்ள அரசாங்க அமைப்புகள் தங்கள் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்கின்றன என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்