சிங்கப்பூரில் ‘ஏஐ’ மோகம்: சூடுபிடிக்கும் பயிற்சி விண்ணப்பங்கள்

சிங்கப்பூரில் ‘ஏஐ’ மோகம்: சூடுபிடிக்கும் பயிற்சி விண்ணப்பங்கள்

1 mins read
fe5a3c4a-3134-4c76-907d-c7111c6a98d9
‘ஏஐ’ பயிற்சிகளுக்கு இருக்கும் வரவேற்பால் வருவாய் அதிகரித்துள்ள பயிற்சி நிலையங்களில் ஒன்றான ஹெய்கோடர்ஸ் அகாடமி. - படம்: ஹெய்கோடர்ஸ் அகாடமி / ஃபேஸ்புக்

சிங்கப்பூரின் சில பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.

ஒருமுறை வழங்கப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகை காலாவதியாகவிருப்பதை முன்னிட்டு இந்தப் போக்கு காணப்பட்டது. அந்தப் போக்கு தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மோகம்

செயற்கை நுண்ணறிவின்மீது உள்ள ஆர்வம் கூடியிருப்பதால் பாட வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பயிற்சி வழங்கும் நிலையங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளன. வருமானம் அதிகரித்துள்ளதோடு தனிநபர்கள், வர்த்தகங்கள் ஆகிய இரு தரப்பினரிடையேயும் தேவையும் அதிகரித்துள்ளதாகப் பயிற்சி நிலையங்கள் குறிப்பிட்டன.

செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளுக்கான கட்டணம் சில நூறு வெள்ளியிலிருந்து ஆயிரக்கணக்கு வரை வசூலிக்கப்படுகிறது. வரவேற்பு சிறப்பாக இருப்பதால் சில பயிற்சி நிலையங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளன.

பெரிதும் அதிகரித்த லாபம்

எடுத்துக்காட்டாக, ஹெய்கோடர்ஸ் அகாடமி நிலையம் ஈட்டும் வருவாயில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு ‘ஜென்ஏஐ’ எனப்படும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளிலிருந்து ஈட்டப்படுபவை என்று அதன் தலைமை நிர்வாகி மின் யான் தெரிவித்தார். அதோடு, கடந்த மூவாண்டுகளில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளின் மூலம் ஈட்டப்படும் லாபம் ஏறத்தாழ 100 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், தாங்கள் வழங்கும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட பயிற்சிகளுக்கான வரவேற்பு நன்கு அதிகரித்திருப்பதாக இன்ஃபோ-டெக் அகாடமி தெரிவித்தது. அத்தகைய பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் 2024ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு 2,070 விழுக்காடு கூடியதாக அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்செயற்கை நுண்ணறிவுஏஐபயிற்சிவிண்ணப்பம்