மத்திய வட்டாரத்தில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்கியது

மத்திய வட்டாரத்தில் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்கியது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Oct 2026 - 10:41 am

1 mins read

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தின் காற்றுத் தரம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) காலை நேரத்தில் மிதமானது முதல் ஆரோக்கியமற்ற நிலைக்கும் இடையே மேலும் கீழுமாகச் சுழன்று வருகிறது.

24 மணி நேரத்துக்கான காற்றுமாசுக் குறியீடு (பிஎஸ்ஐ) அப்பகுதியில் ஆரோக்கியமற்ற நிலையை சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பதிவுசெய்தது.

அன்றிரவு 11 மணியளவிலும் ஞாயிறு காலை 9 மணியளவிலும் தற்காலிகமாகச் சற்று மிதமான அளவைக் குறியீடு காட்டினாலும் மத்திய வட்டாரத்தில் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை அது நெருங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் குறியீடு 103 என்ற எண்ணிக்கையை எட்டியது.

சிங்கப்பூரின் மற்ற வட்டாரங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, குறியீடு 78 முதல் 88 என மிதமான காற்றுத் தரத்தை பதிவுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
காற்றுத்தரம்மாசுபாடுஆரோக்கியம்புகைமூட்டம்சுகாதாரம்இயற்கை