சிங்கப்பூரில் ‘ஏர்ஏஷியா ஃபூட்’ உணவு விநியோகச் சேவை அறிமுகம்

கொவிட்-19 சூழலில் பெரும் சவாலைச் சந்தித்த மலிவுக்கட்டண விமான நிறுவனமான 'ஏர்ஏஷியா', அதன் உணவு விநியோகப் பிரிவுச்
சேவைகளை சிங்கப்பூரில் தொடங்க இருக்கிறது.

'ஏர்ஏஷியா' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி ஃபெர்னாண்டஸ் இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் இந்த சேவை சிங்கப்பூரில் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஏர்ஏஷியாவின் உணவு விநியோகப் பிரிவு மலேசியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த புதிய சேவையில் தங்களுடன் இணைய விரும்பும் விற்பனை நிறுவனங்கள் தங்களை மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ளலாம் என திரு டோனி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் மலேசியாவில் தொடங்கிய இந்த உணவு விநியோகப் சேவை 500 உணவகங்களுக்கு சுமார் 15,000
விநியோகச் சேவைகளை முதல் 3 மாதங்களிலேயே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் $616 மில்லியன் அளவுக்கு உணவு விநியோகச் சேவை வர்த்தகம் சிங்கப்பூரில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரி
விக்கின்றன. கிரேப், ஃபூட்பேண்டா, டிலிவரூ போன்ற முன்னணி நிறுவனங்கள் சிங்கப்பூரின் உணவு வி நியோகச் சேவை துறையில் இடம்பெற்று வருகின்றன.

போட்டித்தன்மைமிக்க கமிஷன்’ முறைப்படி ‘ஏர்ஏஷியா ஃபூட்’ நிறுவனம் இங்கு விநியோகச் சேவைகளை அறிமுகம் செய்யப் போவதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!