2025ஆம் ஆண்டுக்கான ஆசிய பசிபிக் வட்டார விமான நிறுவனங்களின் நேரந்தவறாமைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. 2024ஆம் ஆண்டு அது மூன்றாவது இடத்தில் இருந்தது.
2025ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதற்கான 78.58 விழுக்காட்டுப் புள்ளிகளைப் பெற்றது. 2024ஆம் ஆண்டு அது 78.67 விழுக்காட்டைப் பெற்றிருந்தது.
பட்டியலை விமானங்களைக் கண்காணிக்கும் சீரியம் (Cirium) நிறுவனம் வெளியிட்டது.
பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ் 83.12 விழுக்காட்டுடன் முதலிடத்தில் வந்தது. 2024ஆம் ஆண்டு அது ஏழாவது இடத்தில் இருந்தது.
ஏர் நியூசிலாந்து, ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
புள்ளிப் பட்டியல் 600க்கும் மேற்பட்ட நிகழ்நேர விமானப் பயணத் தகவல் கொண்டு தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஒரு பயணிகள் விமானம் அதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 15 நிமிடங்களுக்குப் புறப்படுவது அல்லது தரையிறங்குவதைக் கணக்கில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உலக அளவில் மெக்சிகோவின் ஏரோமெக்சிகோ முதலிடத்தைப் பிடித்தது. அது 90.02 விழுக்காடு பெற்றது.
இரண்டாவது இடத்தைப் பெற்றது சவூதி அரேபியாவின் சவூதியா (86.53). மூன்றாவது இடம் ஸ்கேன்டினேவியன் ஏர்லைன்சுக்குக் (86.09) கிடைத்தது.

