அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கிய வரிசை; 500 பர்கர்களும் விற்றுமுடிந்தன

1 mins read
a8709faf-2c8f-4bee-8ac7-a4e105239e4d
‘கொலம்பஸ் கேஃபெ’ல் வாடிக்கையாளர்கள் வரிசைப்பிடித்துக் காத்திருக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரபல அமெரிக்க பர்கர் நிறுவனமான ‘இன் அண்ட் அவுட்’, அப்பர் தாம்சனில் உள்ள ‘கொலம்பஸ் கோஃபீ கம்பெனி’இல் அதன் ஒரு நாள் வியாபாரத்தைத் தொடங்கியது.

ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, மே 31ஆம் தேதி காலை 8.55 மணிக்கு, கடை திறக்கப்பட்டது. அதற்குள் 300க்கும் அதிகமானோர் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அந்தக் கடை, அதிகாரபூர்வமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை செயல்படவேண்டியிருந்தது.

முதல் இரண்டு பேர் அதிகாலை 3.30 மணிக்கும், மூன்றாவது நபர் அதிகாலை 4.45 மணிக்கும் அங்குச் சென்றடைந்தனர்.

காலை பத்து மணிக்குள் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் அனைத்து 500 மணிக்கட்டுப் பட்டைகளும் கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு மணிக்கட்டுப்பட்டையைக் கொண்டு, வாடிக்கையாளர் ஒருவர் ஒரு பர்கரை வாங்கமுடியும்.

தொப்பி, டி-சட்டை உள்ளிட்ட பல்வேறு ‘இன் அண்ட் அவுட்’ பொருள்களும் விற்கப்பட்டன.

சரியாக 500 பர்கர்களுக்கான பொருள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக ‘இன் அண்ட் அவுட்’ பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற வியாபாரத்தின்போது விற்கப்பட்ட 350 பர்கர்களைக் காட்டிலும், அது அதிகம்.

குறிப்புச் சொற்கள்