சுற்றுச்சூழலுக்கு உகந்த இல்லச் சாதனங்களுக்கு $300 பற்றுச்சீட்டுகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த இல்லச் சாதனங்களுக்கு $300 பற்றுச்சீட்டுகள்

1 mins read
e6c7edc7-e42f-4160-8725-31f7eef35197
பயனீட்டாளர்கள் பத்து விதமான எரிசக்தி, தண்ணீர்ச் சேமிப்பு சாதனங்களுக்கும் கருவிகளுக்கும் மின்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எரிசக்திச் சேமிப்புக் குளிர்சாதனத்தையோ காற்றாடியையோ வாங்க விரும்புவோர், ஏப்ரல் 15ஆம் தேதி நடப்புக்கு வந்த விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த இல்லச் சாதனங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளையும் உள்ளடக்கும் வகையில், பருவநிலைக்கு உகந்த இல்லத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இப்போது சலவை இயந்திரங்கள், நேர்மின்னோட்டக் காற்றாடிகள் போன்ற பத்து விதமான எரிசக்தி, தண்ணீர்ச் சேமிப்பு சாதனங்களுக்கும் கருவிகளுக்கும் பயனீட்டாளர்கள் மின்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

மரினா ஸ்குவேரில் உள்ள ‘கேன் சிட்டி’ கடைக்குச் சென்றபோது பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர், 145,800 குடும்பங்கள் பருவநிலைப் பற்றுச்சீட்டுகளின் முதல் பகுதிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் அவற்றில் 62,800 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முதலில், ஓரறை முதல் மூவறை வரையிலான வீடுகளில் வசிக்கும் ஏறக்குறைய 300,000 குடும்பங்கள் மட்டுமே பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெற்றிருந்தன. ஆனால், இப்போது 1.1 மில்லியன் வீவக குடும்பங்களும் 2027ஆம் ஆண்டுக்குள் வீட்டுச் சாவிகளைப் பெறவிருக்கும் புதிய வீட்டு உரிமையாளர்களும் அவற்றைப் பயன்படுத்தலாம்.

திட்டத்தின் குறைவான பயன்பாட்டு விகிதம் குறித்து அறிக்கைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, அது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்