சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. 18 குழுத் தொகுதிகள், 15 தனித் தொகுதிகள் என்று மொத்தம் 33 தொகுதிகளில் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் குறித்த எல்லா விவரங்களையும், குறிப்பாக இந்திய வேட்பாளர்கள் பற்றியும் இந்தியச் சமூகத்தின் பார்வைகளையும் தமிழ் முரசு உடனுக்குடன் வழங்குகிறது. சிறப்புக் குறுந்தளம், நேரடித் தகவல்கள் (Live Blog), காணொளிகள், அண்மைய செய்திகள், தொகுதி எல்லை வரைபடம் போன்ற பல வழிகளில் தேர்தல் குறித்த தகவல்களைக் காணலாம்.
குறிப்பாக டிக்டாக், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் தமிழ் முரசு பதிவிட்டு வருகிறது. எழுத்து வடிவமாக மட்டுமல்லாமல் காணொளிகள், வலையொளிகள் என்று பல்லூடக வழி தேர்தல் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் தமிழ் முரசு செய்தியாளர்கள் சேர்ந்து, கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள், கட்சி வேட்பாளர்கள் போன்றவை பற்றித் தங்கள் கருத்துகளை முன்வைத்துக் கலந்துரையாடல் நடத்தினர். ஏப்ரல் 25ஆம் தேதி இளையர்களுடன் ஒரு கலந்துரையாடலும் ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தல் நடப்புகளை ஆராயும் மற்றொரு காப்பிக் கடைக் கலந்துரையாடலும் நடக்கும்.
வாக்களிப்பு நாளான மே மாதம் 3ஆம் தேதி இரவு 9 மணிக்கு தமிழ் முரசின் சிறப்பு நேரடித் தேர்தல் ஒளிபரப்பு தமிழ் முரசின் தளங்களிலும் யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் தளங்களிலும் ஒளிபரப்பாகும். காணத் தவறாதீர்கள்!