தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிகளில் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும்: டெஸ்மண்ட லீ

2 mins read
49bfc4b4-275d-4f20-a09b-85c9645ecf34
நாடாளுமன்றத்தில் பேசிய கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பள்ளிகளில் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் அனைத்தும் வரவேற்கப்படும் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் நடக்கும் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது இதை அமைச்சர் லீ கூறினார்.

துன்புறுத்தலுக்கு எதிரான குழு, நிபுணத்துவ உதவி, பெற்றோர் உதவிக் குழுக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பரிந்துரைகள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன, அதை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சுக்குக் கிடைக்கும் பரிந்துரைகள் அனைத்தும் ஆராயப்பட்ட பிறகு 2026ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவை அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

“கல்வி நிலையங்களில் நடக்கும் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுக்க எப்போதுமே நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்,” என்றார் திரு லீ.

ஜூரோங் சென்ட்ரல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியே யாவ் சுவான், “பள்ளிகளில் துன்புறுத்தலுக்கு எதிரான மத்திய குழு அமைத்து ஆசிரியர்களின் மீதான சுமையைக் குறைக்கலாம்,” என்றார் அவர்.

அதேபோல் செங்காங் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ரூ, “பள்ளிகள் குழந்தை பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல் தடுப்பு நிபுணர்கள் அல்லது அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்,” என்று கூறினார்.

“துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்தால் அதைச் சரியான முறையில் விசாரிக்கத் தேவையான வளங்கள், ‘சிசிஏ’ பாடத்திட்டங்கள்மூலம் நற்பண்புகளை வளர்ப்பது, துன்புறுத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாணவர்கள் எப்படி ஆதரவாக இருக்க வேண்டும்,” உள்ளிட்ட பரிந்துரைகள் அமைச்சுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் லீ கூறினார்.

“பிள்ளைகள் தவறு செய்வார்கள், நமது குழந்தைகளுக்கு நாம்தான் உதவ வேண்டும், அவர்கள் நம் நாட்டின் அடுத்த தலைமுறை, அனைவரையும் அரவணைத்து நடக்கப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும், அன்பாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் லீ வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்