லாரி ஓட்டி, விபத்து ஏற்படுத்தி ஒருவருக்கு மரணம் விளைவித்ததாக இந்திய நாட்டவரான 24 வயது அசோகன் சந்தோஷ்சிவம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுவதற்கான உரிமம் இன்றி அவர் லாரி ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அசோகன் ஓட்டிச் சென்ற லாரி கேட் ஒன்றின் மீது மோதியதில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
அது இரண்டு பாதசாரிகள் மீது விழுந்தது.
அவர்களில் ஒருவர் மாண்டார்.
அந்த பாதசாரிகள் இருவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இருவருக்கும் 34 வயது.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில், துவாஸ் சவுத் அவென்யூ 4ற்கு அருகில் டெக் பார்க் கிரசெண்ட்டில் நிகழ்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
அசோகன் மீது புதன்கிழமை (ஜூன் 18) நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அவர் ஆகஸ்ட் மாதம் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தை முதல்முறை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.