அமெரிக்க வட்டி விகித உயர்வு சிங்கப்பூரிலும் எதிரொலிப்பு

அமெரிக்க வட்டி விகித உயர்வு சிங்கப்பூரிலும் எதிரொலிப்பு

கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

02 Oct 2026 - 7:20 pm

2 mins read

அமெரிக்க மத்திய வங்கி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நிலையான, மாறுவிகித வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

$500,000 கடனுக்கான பல நிலையான வட்டித் திட்டங்கள் இப்போது 2 விழுக்காட்டைத் தாண்டியுள்ளன. மேபேங்க் 3 ஆண்டுத் திட்டத்திற்கு 2.55 விழுக்காடும், ஓசிபிசி 2.08 விழுக்காடும் வசூலிக்கின்றன. சிட்டிபேங்க் 2.2 விழுக்காடும், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி 2 விழுக்காடாகவும் வட்டியை உயர்த்தியுள்ளன. அமெரிக்க வட்டி உயர்வு, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாக ஓசிபிசி, யுஓபி, டிபிஎஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன.

எனினும், சிங்கப்பூரின் நாணயக் கொள்கை, வங்கிகளில் உள்ள போதுமான ரொக்கப்புழக்கம் காரணமாக, இங்குள்ள வட்டி உயர்வு அமெரிக்கா அளவுக்குக் கடுமையாக இருக்காது என டிபிஎஸ் முதலீட்டு நிபுணர் ஜோன் கோ தெரிவித்தார்.

நிலையற்ற உலகப் பொருளியல், ஈரான் போரினால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் கடன் ஆலோசனைக் குழுக்கள், நீண்ட காலத் திட்டங்களைவிட ஓர் ஆண்டு போன்ற குறுகிய கால நிலையான வட்டித் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது எனக் கருதுகின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கான வட்டி விகிதம் 2.6 விழுக்காடாக நீடிக்கும் வேளையில், டிபிஎஸ் வங்கி மசேநிதி சாதாரண கணக்கு வட்டியை விடக் குறைவான கட்டணத்தில் சிறப்புத் திட்டங்களை வழங்குகிறது.

விளம்பர வட்டியை மட்டும் பார்க்காமல், தங்களின் நிதிநிலைக்கு ஏற்ப சரியான கடன் திட்டத்தைத் தேர்வு செய்யுமாறு வங்கியாளர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வட்டிவீடுவீவககடன்அதிகரிப்பு