நவம்பர் வரை ஏமஸ் யீயின் விடுதலை ஒத்திவைப்பு

1 mins read
20396363-55e0-4b05-a7db-91bb16d86feb
தேசிய சேவையில் சேர்வதற்கு முன்பாக மேற்கொள்ளவேண்டிய மருத்துவச் சோதனைக்குச் செல்லத்தவறிய யீ, டிசம்பர் 2016்ல் அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்தார். - படம்: இல்லனோய் சிறைத்துறை

சிறார் பாலியல் குற்றவாளி ஏமஸ் யீ, அமெரிக்காவில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குச் சிறையில் இருக்கப்போகிறார்.

வாழ்நாள் முழுவதும் அவரை அமெரிக்க அதிகாரிகள் கண்காணிக்கும் சாத்தியமும் உள்ளது.

ஈராண்டுகளுக்கு முன்னதாக மறுபடியும் கைது செய்யப்பட்ட ஏமஸ், இவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதியன்று முன்கூட்டியே விடுதலை பெறவிருப்பதாக இல்லனொய் சிறைத்துறையின் அதிகாபூர்வத் தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக யீ, ஏப்ரல் 24ஆம் தேதியில் விடுதலை செய்யப்பட வேண்டியிருந்தது. ஆனால் அவர், அந்த விடுதலைக்கான நிபந்தனைகளை மீறியதால் விடுதலை செய்யப்படவில்லை என்று இல்லனொய் சிறைத்துறை தெரிவித்தது.

தேசிய சேவையில் சேர்வதற்கு முன்பாக மேற்கொள்ளவேண்டிய மருத்துவச் சோதனைக்குச் செல்லத்தவறிய யீ, டிசம்பர் 2016்ல் அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்தார்.

இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் தொடர்பில் முன்னாள் வலைத்தளப் பதிவளரான யீ, இருமுறை சிங்கப்பூரில் சிறையில் இடப்பட்டார்.

சிங்கப்பூரில் அரசியல் குறித்த தம் கருத்துகளுக்காகத் துன்புறுத்தப்படுவதாகக் கூறிய யீக்கு அரசியல் அடைக்கலம் அமெரிக்காவில் வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் அவர், மீண்டும் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டார்.

பிப்ரவரி 2019ல் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருவரிடம் அவரது நிர்வாணப் படங்களைக் கேட்டதுடன் யீ, தனது சொந்த நிர்வாணப் படங்களையும் அனுப்பினார்.

ஆயிரணக்கணக்கான குறுஞ்செய்திகளின் மூலம் பல்வேறு பாலியல் நடவடிக்கைகளைப் பற்றி யீ வர்ணித்தார். அந்தச் சிறுமி, பல்வேறு முறை தம் வயதையும் யீயிடம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்