சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 134வது கதைக்களம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தேசிய நூலகத்தின் ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறவிருக்கிறது.
அதில் பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த் திவலைகள்’ நூலைப்பற்றி ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கருத்துகளைப் பகிரவிருக்கின்றனர்.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலை மாணவர் - ‘SG60 கொண்டாட்டத்தில் எனக்கு இப்படியொரு வாய்ப்பா!’ என்னால் நம்பவே முடியவில்லை’.
இளையர் பிரிவு: - ‘யார் சொல்வதற்கும் நான் இணங்குவதாக இல்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்’.
பொதுப்பிரிவு - ‘மோசடிக்காரர்களின் வலையில் சிக்கியுள்ளதை உணர்வதற்குள் நிலைமை கைமீறியிருந்தது’.
படைப்புகளை https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக ஆகஸ்ட் 29க்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16.
தொடர்புடைய செய்திகள்
தொடர்பிற்கு: மணிமாலா மதியழகன் - 8725 8701 / பிரேமா மகாலிங்கம் 9169 6996