அங் மோ கியோ வீவக வீட்டின் மாத வாடகை $6,500

புளோக் 17 செங் போ ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நாலறை வீடு ஒன்று, கடந்த ஆண்டு டிசம்பரில் மாதத்திற்கு $6,200க்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த வீட்டின் குத்தகைக் காலத்தில் 73 ஆண்டுகள் முடிந்துவிட்டபோதிலும் பெரிய அளவில் அது வாடகை வருமானத்தைப் பெற்றுத் தந்தது.

ஆனால், புளோக் 549 அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள ஐந்தறை வீவக வீடு, இப்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மாத வாடகையாக $6,500ஐ அந்த வீடு ஈட்டியது. வீவக இணையப் பக்கத்தில் இந்தத் தகவல் இடம்பெற்றது.

புளோக் 549ல் ஒரேயொரு ஐந்தறை வீடு மட்டுமே உள்ளது. இரு மூவறை வீடுகளுக்கு இடையே உள்ள சுவரை இடித்ததன் மூலம் அந்த வீடு ஐந்தறை வீடானது என நம்பப்படுவதாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.

எனவே, அந்த வீட்டின் பரப்பளவு 1,400 சதுர அடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. வழக்கமான ஐந்தறை வீவக வீட்டின் அளவைவிட இது பெரியதாகும்.

அந்த வட்டாரத்தில் இதேபோன்ற வீடுகள் கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பெற்றுத் தந்த $3,150 இடைநிலை வாடகையை ஒப்புநோக்க, இந்த வீட்டின் வாடகை இருமடங்கிற்கும் அதிகம்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தைப் பொறுத்தமட்டில், புளோக் 549 அங் மோ கியோ அவென்யூ 10க்கான குத்தகைக்காலம் 1981 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கியது. அப்படியென்றால், அதன் குத்தகைக்காலத்தில் 56 ஆண்டுகள், 10 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!