தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோ கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
2851e8fb-5551-4e37-af80-42edf3c2a7bc
புளோக் 125 அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள தமது வீட்டில் திருவாட்டி லிம் சுவான் லியன் சுயநினைவின்றி கிடந்ததை அதிகாரிகள் கண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் 67 வயது பெண்மணியைக் கொன்றதாக ஆடவர் மீது நவம்பர் 30ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.

அப்பெண்மணி நவம்பர் 27ஆம் தேதிக்கும் 29ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக 66 வயது இங் சென் ஹெங் நவம்பர் 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 1.25 மணி அளவில் உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

புளோக் 125 அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள தமது வீட்டில் திருவாட்டி லிம் சுவான் லியன் சுயநினைவின்றி கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இங்கும் திருவாட்டி லிம்மும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்