தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங் மோ கியோ குழுத்தொகுதி மசெக அணிக்கு மூத்த அமைச்சர் லீ தலைமை

2 mins read
ஐந்து பேர் இடம்பெறும் குழுத்தொகுதியில் இரு புதுமுகங்கள்; ஜாலான் காயு, கெபுன் பாரு, இயோ சூ காங் வேட்பாளர்களும் அறிமுகம்
e6a8bd26-3b41-4931-a4c2-668bda8a8c86
மக்கள் செயல் கட்சியின் டெக் கீ கிளையில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது மூத்த அமைச்சர் லீ சியன் லூங், வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். - படம்: சாவ்பாவ்

அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடவுள்ள ஐந்து வேட்பாளர்களையும் ஜாலான் காயு, கெபுன் பாரு, இயோ சூ காங் தனித்தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் மக்கள் செயல் கட்சி அறிமுகம் செய்துள்ளது.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஜாஸ்மின் லாவ், விக்டர் லாய், டேரல் டேவிட், நாடியா சம்டின் ஆகியோர் அங் மோ கியோ குழுத்தொகுதியில் இடம்பெறுவர்.

புதிதாக இடம்பெறும் இருவர், வெளியேறியுள்ள திருவாட்டி இங் லிங் லிங்கிற்கும் திரு கான் தியாம் போவுக்கும் பதிலாகப் போட்டியிடுவர்.

அத்துடன், அங் மோ கியோ குழுத்தொகுதியிலிருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட ஜாலான் காயு தனித்தொகுதியில் இங் சீ மெங், கெபுன் பாரு தனித்தொகுதியில் குவெக் கியேன் சுவான், இயோ சூ காங் தனித்தொகுதியில் யிப் ஹொன் வென் ஆகியோர் போட்டியிடுவர்.

மக்கள் செயல் கட்சியின் டெக் கீ கிளையில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது திரு லீ, இவர்களை அறிமுகம் செய்தார்.

Watch on YouTube

அங் மோ கியோ குழுத்தொகுதியின் புதிய இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான 42 வயது திரு ஜாஸ்மின் லாவ், சுகாதார அமைச்சின் முன்னாள் கொள்கைப் பிரிவின் உதவிச் செயலாளர்.

மற்றொருவரான 63 வயது விக்டர் லாய், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிதித்தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமாக உள்ளார்.

2015லும் 2020லும் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் தோற்ற மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணியினரில் அவரும் ஒருவர்.

மக்கள் செயல் கட்சியில் வேட்பாளராகக் கொண்டுவரப்பட்ட 30க்கும் மேற்பட்ட புதுமுகங்கள், புதிய யோசனைகளையும் தெம்பையும் கொண்டுவந்து அனுபுள்ளத் தம்மைப் போன்றோருடன் இணைந்து பணியாற்றப்போவதாகத் திரு லீ கூறினார்.

“இவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர்கள் நல்ல நபர்கள். பன்முகத்தன்மை, கடப்பாடு, ஆர்வம் ஆகியவற்றுடன் பல்வேறு பின்புலன்களையும் அனுபவங்களையும் கொண்டுவருகின்றனர். அவர்கள் சிங்கப்பூருக்கு நிச்சயம் நல்ல முறையில் பணியாற்றுவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை,” என்று திரு லீ கூறினார்.

தேர்தலில் 32 புதுமுகங்கள் களம் புகும் இந்நிலையில் எம்பிக்களில் சிலரும் தங்கள் பதவியை விட்டு விலகுகின்றனர். வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார் மூத்த அமைச்சர் லீ.

பதவிக்காலம் குறித்து செய்தியாளர் ஒருவரிடம் கேட்கப்பட்ட திரு லீ, இது நாடாளுமன்ற உறுப்பினராகச் செயலாற்றும் தம் கடைசி தவணையா என்பது தெரியாது எனத் தெரிவித்தார்.

“அது பிரதமரின் முடிவைப் பொறுத்தது.ஆயினும், என்னால் பயன் இருக்கும் வரையிலும் எனக்குப் பயன் இருப்பதாகப் பிரதமர் நினைக்கும் வரையிலும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்