ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாத விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் ஒரு நிறுவனம்

ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாத விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் ஒரு நிறுவனம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jun 2026 - 9:35 pm

1 mins read

விவிஆர் பிளான்ட் இஞ்சினியரிங் (VVR Plant Engineering) எனும் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

400 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாத விவகாரத்தில் இப்போது மூன்றாவதாக ஒரு நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களுக்குமான இயக்குநர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ராமு பழனி வேலு எனும் அந்த அடவர் இந்தியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியாவார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள விவிஆர் பிளான்ட் இஞ்சினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ், கேபிஏ இஞ்சினியரிங் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் ராமு பழனி வேலு இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.

ராமு, சிங்கப்பூரில் உள்ள மொத்தம் ஏழு நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்தார் என்று வர்த்தகத் தகவல் தளமான சாயாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஊழியர்சம்பளம்இங் சீ மெங்இயக்குநர்