அமெரிக்க கணிதப்போட்டியின் விடைகள் இணையத்தளங்களில் கசிவு

1 mins read
36a0168a-dc7b-4352-8182-9bcac5679347
ஒரு மின்வர்த்தகத் தளத்தில் கணிதப் போட்டியின் விடைகளுக்கு 100 யுவான் (S$19) விலை குறிப்பிடப்பட்டிருந்தது. - படம்: சாவ்பாவ்

அமெரிக்காவில் நடத்தப்படும் மதிப்புவாய்ந்த உலகக் கணிதப் போட்டியின் விடைகள் கசிந்து இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

‘ஏஎம்சி 8’ என்ற அந்த கணிதப் போட்டியின் விடைகள் பல சீன மின்வணிகத் தளங்களிலும் குறைந்தது ஒரு சமூக ஊடகத் தளத்திலும் கசிந்திருந்ததைக் கண்டறிந்ததாக சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ் தெரிவித்தது.

ஜனவரி 22 முதல் 30 வரை நடைபெறவிருக்கும் அமெரிக்கக் கணிதப் போட்டியின் விடைகளின் பட்டியலுக்கு ஒரு மின்வர்த்தகத் தளத்தில் 100 யுவான் (S$18.80) விலை குறிப்பிடப்பட்டிருந்தது. திரையில் எடுக்கப்பட்ட படத்தை அந்த நாளேடு ஆதாரமாக வெளியிட்டிருந்தது.

ஏஎம்சி 8 தேர்வில் 14 வயதுக்குட்பட்ட 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகம் முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர். 25 கேள்விகளைக் கொண்ட தேர்வை கணிப்பொறி உதவியின்றி நாற்பது நிமிடத்தில் முடிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள பல துணைப்பாட நிறுவனங்கள் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்களுக்குச் செய்து தருகின்றன.

தேர்வு மதிப்பெண்களை நேரடி மாணவர் சேர்க்கை நடவடிக்கையின்போது மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஏஎம்சி 8 மட்டுமல்லாமல் 14 வயதுக்குட்பட்ட மேலும் ஒரு தேர்வு ஏஎம்சி 10 பெயரில் நடத்தப்படுகிறது. ஏஎம்சி 12, பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு நடத்தப்படுகிறது.

ஏம்எம்சி 8 மற்றும் அதன் தொடர்பான இதர தேர்வுகள் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குமேல் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்