மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு ஏற்ற மின்னூட்டிகள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட 300 வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின்(வீவக) கார் நிறுத்துமிடங்களில் நிறைவடைந்துவிட்டது.
இதற்கான பெரிய அளவிலான குத்தகை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடப்பட்டது.
இதன்மூலம் தற்போது 15 விழுக்காடு வீவக கார்நிறுத்துமிடங்களில் மின்னூட்டிகளை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதை அமைக்கும் பணி 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்பட்டதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் கிட்டத்தட்ட12 வீவக கார் நிறுத்துமிடங்களில் இந்தப் பணி நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
“இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்றில் ஒரு பங்கு வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்டிகளை அமைக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. அதை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம்,” எனப் போக்குவரத்து, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடும்போது கூறினார்.


