மோட்டார்சைக்கிளை கைவிட்டு ஓடிய இளையர் கைது

1 mins read
c96767d7-f99a-4522-a8f7-73c6f18ecf93
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை செய்திருக்கலாம் என்று இளையர் மீது காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை சோதனை நடத்தியபோது மோட்டார் சைக்கிளை கைவிட்டுவிட்டு ஓடிய இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 3ஆம் தேதி இரவு லாவண்டர் ஸ்திரீட்டில் சாலைத் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இரவு 11.25 மணியளவில் அங்கு வந்த 19 வயது இளையர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் அந்த இளையர் மோட்டார்சைக்கிளை கைவிட்டுவிட்டு ஓடினார்.

“போக்குவரத்து காவல்துறையினர் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று பிடித்தனர்,” என்று காவல்துறை தெரிவித்தது. இதில் சிறிய அளவில் காயம் அடைந்த அதிகாரி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காகவும் போதைப் பொருள் தொடர்பான சந்தேகத்தின்பேரிலும் இளையர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை மேலும் கூறியது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்