அதிக வெப்பத்திலிருந்து ஊழியர்களைக் காக்க செயற்கை நுண்ணறிவு

அதிக வெப்பத்திலிருந்து ஊழியர்களைக் காக்க செயற்கை நுண்ணறிவு

1 mins read
1913ad49-2aba-404e-8a04-25bc1e6692f0
அதிக வெப்பநிலையை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் முறை அண்மையில் சோதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்கள் வெப்பமான வேலைச்சூழலைத் தவிர்க்க, பாசிர் ரிஸ்ஸில் உள்ள ஒரு போக்குவரத்து வேலைத்தளம் அண்மையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியது.

அந்தத் தொழில்நுட்பம் மனிதவள அமைச்சின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், குளிர்விக்கும் தீர்வுகளை ஊழியர்களுக்குப் பரிந்துரைக்கும். மேலும், அது தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக அவர்களின் மேற்பார்வையாளர்களுக்குத் தானாகவே அனுப்பப்படும்.

உதாரணத்திற்கு, பிற்பகல் 2 மணியளவில் 33 டிகிரி செல்சியஸ் என்னும் சற்று அதிக வெப்பநிலையை அந்த செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் கணித்தால், மேற்பார்வையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு வெப்பநிலை தவிர்ப்பு ஆலோசனையை வழங்குவர்.

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும் ஒவ்வொரு மணி நேர வேலைக்குப் பின்னரும் 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும் அவர் முன்கூட்டியே நினைவூட்டுவார்.

இரு மாதங்களுக்கு முன்னர், லோயாங் மேம்பாலத் தளத்தில் அந்தத் தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டது.

முன்கூட்டி எச்சரிக்கைகளை வழங்குவதற்கும் அப்பால், வெப்பக் கண்காணிப்பையும் அந்தப் புதிய தொழில்நுட்பம் திறம்படச் செய்ததாக ‘ஹுவா செங் பில்டர்’ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் லிம் எங் பூன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்