ஊழியர்கள், பொதுமக்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

1 mins read
9b9cc67c-e905-4df9-82e6-a7693e4d831d
வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நிபுணத்துவ இணையப்பக்கங்கள், சேட்போட்கள் ஆகியவற்றை உருவாக்க ஊழியர்கள் கற்றுக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நிபுணத்துவ இணையப்பக்கங்கள், சேட்போட்கள் ஆகியவற்றை உருவாக்க ஊழியர்கள் கற்றுக்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய மின்னிலக்கப் பொருளியலுக்கு ஊழியரணியைத் தயார்ப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம் விரிவாக்கப்படுகிறது.

பயண அட்டவணைகளை உருவாக்க, உணவு தொடர்பான பரிந்துரைகளைப் பெற, ஆள்மாறாட்டத்தை அடையாளம் காண பொதுமக்களுக்கும் இத்திறன் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

சிங்கப்பூரர்களிடையே செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“செயற்கை நுண்ணறிவு திறன்கொண்டவர்களை, செயற்கை நுண்ணறிவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாகத் திகழ விரும்புகிறோம்,” என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இத்தகவல்களை அவர் வெளியிட்டார்.

ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதன் மூலம் சிங்கப்பூரின் பொருளியல் போட்டித்தன்மையை நிலைநாட்டி கூடுதல் பணிகளைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.

அடுத்த நிதி ஆண்டில் மின்னிலக்கப் பொருளியலில் வளர்ச்சி அடையத் தேவையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதே தமது அமைச்சின் இலக்கு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்