பொங்கோலில் 22 வயது ஆடவர் மீது தாக்குதல், அடுக்குமாடி பகுதியில் ரத்தக்கறை

1 mins read
fbcf0027-9e84-4184-983d-2301897130f7
புளோக் 622aக்கும் புளோக் 622bக்கும் இடையில் கிட்டத்தட்ட 100 மீட்டர் நீளத்திற்கு ரத்தக் கறை படிந்து இருந்ததாக சீன மொழி நாளேடான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.  - படம்: ஷின் மின் டெய்லி நியூஸ்

பொங்கோல் வட்டாரத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் தாக்கப்பட்ட 22 வயது ஆடவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

புளோக் 622A பொங்கோல் சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆடவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

புளோக் 622aக்கும் புளோக் 622bக்கும் இடையில் கிட்டத்தட்ட 100 மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கு ரத்தக் கறை படிந்து இருந்ததாக சீன மொழி நாளேடான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது. மின்தூக்கி, மின்தூக்கித்தளம், தரைத் தளம், படிக்கட்டுச் சுவர் ஆகிய இடங்களில் ரத்தம் சிந்தியிருப்பதைக் காட்டும் படங்களை ஷின் மின் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காவல்துறை இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்