மைடுகுரி: நைஜீரியாவில் உள்ள சந்தை ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் மாண்டனர். பலர் கடத்தப்பட்டதாகவும் அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (ஜனவரி 3) நிகழ்ந்தது.
நைஜீரிய நேரப்படி சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில், துப்பாக்கிக்காரர்கள் கசுவான் டாஜி சந்தைக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்தகுல் நடத்தினர்.
அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்ததாகவும் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்தனர்.
பாதிப்படைந்தோரில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.
கடத்தப்பட்டோரை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
தாக்குதல் நிகழ்ந்தபோதிலும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அங்குள்ள மக்கள் அதிருப்திக் குரல் எழுப்பினர்.
மாண்டோரின் சடலங்களை மீட்டுத் தாங்களே அவற்றை அடக்கம் செய்வதாக அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தாக்குதல் நடத்தியோரைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க பதிலடி கொடுக்குமாறு நைஜீரிய அதிபர் போலா டினுபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

