ஆஸ்திரேலியாவில் ஓங் யி காங்கின் அண்ணன் போட்டி

1 mins read
a6c33e3e-9064-494f-85c4-ed9dcc22c50f
மேற்கு ஆஸ்திரேலியாவில் டேங்னே தேர்தல் வட்டாரத்தின் மிதவாதக் கட்சியின் வேட்பாளராகத் திரு ஹவர்ட் ஓங் போட்டியிடுகிறார். - படம்: ஹவர்ட் ஓங் பேஸ்புக் பக்கம்

சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கின் அண்ணன் ஹவர்ட் ஓங், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற இடத்திற்காக வரும் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சமூகத்திற்குப் பங்காற்றுவதில் தங்கள் குடும்பத்திற்கு வலுவான கடப்பாடு என்றும் இருப்பதாகத் திரு ஹவர்ட் ஓங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

“சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் எங்கள் குடும்பத்திற்கு எப்போதும் வலுவான கடப்பாடு கொண்டிருந்தது. அந்தக் கடப்பாட்டை நான் என்னுடன் சுமந்து வந்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் டேங்னே தேர்தல் வட்டாரத்தின் மிதவாதக் கட்சியின் வேட்பாளராகத் திரு ஹவர்ட் ஓங் போட்டியிடுகிறார்.

சிங்கப்பூரில் வளர்ந்த திரு ஹவர்ட் ஓங், காலாட்படையில் லெஃப்டினண்ட் அதிகாரியாக தேசிய சேவை ஆற்றியதாக அவரது கட்சியின் இணைத்தளம் குறிப்பிடுகிறது.

கர்ட்டின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்க 28 ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஆஸ்திரேலியா சென்ற திரு ஒங், அங்குத் தமது வருங்கால மனைவியைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.

தகவல் தொழில்நுட்ப வர்த்தகம் ஒன்றை அந்த இணையர் தொடங்கினர்.

திரு ஓங்கின் தந்தை ஓங் லியேன் டெங், அக்காலத்து சிங்கப்பூரின் எதிர்க்கட்சியாக இருந்த ‘சோஷலிஸ்ட் முன்னணி’ (பாரிசான் சோஷலிஸ்ட்) அரசியல்வாதியாக இருந்தார்.

1963 முதல் 1965 வரை புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்ட அவர், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பின் 1965லும் 1966லும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

குறிப்புச் சொற்கள்