தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்கூட் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆஸ்திரேலிய பயணி

1 mins read
0dab8d8f-0c55-4a29-8b33-e335ad1b68a1
இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் காணொளிகளில், ஆடவர் அறைந்ததில் மற்றொரு பயணியின் தொப்பி அவரின் தலையிலிருந்து கீழே விழுந்ததைக் காணமுடிந்தது. - படங்கள்: இணையம்

கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் பிலிப்பீன்சில் விமானம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மற்றோர் ஆண் பயணியை அறைந்து, சண்டை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டிற்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த ஆடவர் ஸ்கூட்டின் டிஆர்396 ரக விமானத்தில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அவரது பயணத்தைத் தொடங்கினார். இடைவழியில் தற்காலிகமாகத் தரையிறங்குவதற்கு சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த அந்த விமானத்தில் அவர் மற்ற பயணிகளை இழிவுபடுத்தியதாகவும், விமானச் சிப்பந்திகளை வற்புறுத்தி தண்ணீர் கேட்டதாகவும் நியூயார்க் போஸ்ட் தெரிவித்தது.

மணிலா சென்றடைந்ததும், தம்மைப் படமெடுத்துக்கொண்டிருந்த பயணி ஒருவரை அந்த ஆடவர் எதிர்த்துநின்று அறைந்தார்.

இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் காணொளிகளில், ஆடவர் அறைந்ததில் அந்தப் பயணியின் தொப்பி அவரின் தலையிலிருந்து கீழே விழுந்ததைக் காணமுடிந்தது.

அந்த ஆஸ்திரேலிய ஆடவர் மிகச் சத்தமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்தகொண்டதாக விமானத்தில் இருந்த மற்றொரு பயணி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அந்த ஆடவர் கட்டுப்படுத்தப்பட்டு, பின்னர் மணிலா சென்றடைந்ததும் உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்கூட் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பிலிப்பீன்சுக்குள் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் டிசம்பர் 2ஆம் தேதி அவர் பெர்த் நகருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்