சாங்கி விமான நிலையத்தில் தகராறு செய்த ஆஸ்திரேலியப் பெண் கைது

சாங்கி விமான நிலையத்தில் தகராறு செய்த ஆஸ்திரேலியப் பெண் கைது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Nov 2026 - 12:18 pm

1 mins read

சாங்கி விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலியப் பெண்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.

இவ்வாண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, மூன்றாம் முனையத்தின் வரவேற்புப் பகுதியில் பணிபுரிந்த ஊழியர், பின்னிரவு 12.05 மணியளவில் அந்தப் பெண் குறித்து அதிகாரிகளிடம் தகவல் அளித்தார்.

பின்னிரவு 12.45 மணியளவில் புறப்படவிருந்த விமானத்திலிருந்து இறங்கும்படி பெண்ணிடம் கூறப்பட்டது.

அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தபோது முரட்டுத்தனமாக நடந்துகொண்ட பெண், அமரும்படி உத்தரவிடப்பட்டும் அங்கிருந்து வெளியேற முயற்சி செய்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

மேலும், அதிகாரிகள் இருவரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படும் அந்தப் பெண், அதிகாரி ஒருவரைப் பார்த்து தகாத வார்த்தைகளைப் பேசியதுடன் மற்றோர் அதிகாரியின் வலது தொடையில் அடித்ததாகவும் நம்பப்படுகிறது.

பெண் நடந்துகொண்ட விதம் அங்கிருந்த பொதுமக்களுக்குத் தொல்லையாக இருந்தது என்றும் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பவத்தை அடுத்து கைதுசெய்யப்பட்ட பெண், விமான நிலையக் காவல்துறைப் பிரிவிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டார்.

கடமையைச் செய்யவிடாமல் அரசாங்க ஊழியருக்கு இடையூறாக இருந்தது, அரசாங்க ஊழியருக்கு எதிராகத் தகாத வார்த்தைகளைக் கூறியது, பொதுமக்களுக்குத் தொல்லை தந்தது ஆகிய குற்றச்சாட்டுகளைப் பெண் எதிர்நோக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க ஊழியருக்கு இடையூறாக இருந்ததற்கு அதிகபட்சம் 4 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டு விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்