நிலப் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ ஆஸ்திரேலியாவில் 1.4 பில்லியன் மதிப்புள்ள குத்தகையை வென்றுள்ளது.
அதன்மூலம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் மூன்று பேருந்து நிறுவனங்களின் சேவைகளை கம்ஃபர்ட்டெல்குரோ வழங்கும்.
கம்ஃபர்ட்டெல்குரோவின் ஆஸ்திரேலிய குழுமம் மூலம் இந்த குத்தகை கிடைத்துள்ளது. இதனால் விக்டோரியா மாநிலத்தில் உள்ள பொதுப் பேருந்து சேவைகளில் தங்களுக்கு 30 விழுக்காடு வளர்ச்சி கிடைத்துள்ளதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்துள்ளது.
புதிய குத்தகை 10 ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும்.
புதிய குத்தகை மூலம் கூடுதலாக 86 பேருந்துகளை கம்ஃபர்ட்டெல்குரோ கையகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மெல்பர்னில் செயல்படும் அந்நிறுவனத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 369க்கு உயர்ந்துள்ளது.

