காணாமல்போன பணப்பையை தன் தேவைக்காக பயன்படுத்திய அதிகாரி

1 mins read
a9095cc4-f1f2-4d90-a7e0-a6b9d33004a2
படம்: - பிக்சாபே

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தொலைந்துபோன பணப்பையிலிருந்த பற்றட்டையைத் தன் தேவைக்குப் பயன்படுத்திய துணைக் காவல் அதிகாரிமீது புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் தொலைந்துபோன பணப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டு அங்கு முனையம் 3இல் பணியில் இருந்த 46 வயது துணைக் காவல் அதிகாரியான ஜியோங் சுன் யோங்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பணப்பையில் இருந்த யுஒபி வங்கியின் பற்றட்டையை அவர் தன் தேவைக்காக பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் இந்தக் குற்றத்தை கடந்த ஜூலை மாதம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

ஜூலை மாதத் தொடக்கத்தில் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு பணப்பையில் இருந்த, நியூசிலாந்து உட்படப் பல்வேறு நாடுகளில் நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமான வெஸ்ட்பேக்கின் இரண்டு அட்டைகளை ஜியோங் தன் தேவைக்காகப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கை மோசடி உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.

2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வோர் ஏமாற்றுக் குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்