சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் அந்த இடங்களைத் தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மாலை அறிவுறுத்தியது.
எக்ஸ் தளத்தில் கழகம் வெளியிட்ட பதிவுகளில், பின்வரும் இரண்டு பகுதிகளையும் ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தியது.
மாலை 6.39 மணி முதல்: இன்டர்நேஷனல் ரோட்டிற்கும் என்டர்பிரைஸ் ரோட்டிற்கும் இடைப்பட்ட ஜாலான் பூன் லே பகுதி.
மாலை 6.51 மணி முதல்: கல் வே, கல் சர்க்கள் சந்திப்பு.
ஏப்ரல் பிற்பாதியில் சில நாள்களில் மாலை வேளை வரை இடியுடன் கூடிய மழை நீடிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 16ஆம் தேதி முன்னுரைத்திருந்தது.

