கோடரித் தாக்குதல்: ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

கோடரித் தாக்குதல்: ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

படம்: பிக்சாபே

12 Feb 2026 - 3:59 pm

1 mins read

ஆடவர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.

30 வயது இந்தோனீசியப் பெண்ணைக் கொலை செய்ய முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது இந்திய நாட்டவர் புதன்கிழமையன்று (பிப்ரவரி 11) கைது செய்யப்பட்டார்.

சிம்ஸ் வியூவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தாக்குதல் நடந்ததாக புதன்கிழமை (பிப்ரவரி 11) காலை 7.05 மணி அளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை கூறியது.

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட பெண்ணை அந்த ஆடவர் கோடரியால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆடவருக்கும் காயமடைந்த பெண்ணுக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்று காவல்துறை கூறியது.

கைது செய்யப்பட்ட ஆடவர் மீது வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 13) கொலை முயற்சி குற்றம் சுமத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

அல்லது 20 ஆண்டுகள் வரை சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
குற்றம்குற்றச்சாட்டு