ஆயர் ராஜா விரைவுச் சாலை விபத்தில் 17 பேர் காயம்

ஆயர் ராஜா விரைவுச் சாலை விபத்தில் 17 பேர் காயம்

வானங்களில் சிக்கியிருந்த மூவர் கருவிகளைக்கொண்டு வெளியேற்றப்பட்டனர்
படம்: JHEMAVATHY JEGASIVAN ஃபேஸ்புக்

13 May 2026 - 9:52 am

1 mins read

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் திங்கட்கிழமை (மே 11) நேர்ந்த விபத்தில் 17 பேர் காயமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சேதமடைந்த வாகனங்களுக்குள் சிக்கி இருந்த மூவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.

கொள்கலன்களை இழுத்துச் செல்லும் கனரக வாகனமும் (டிரைலர்), மூன்று லாரிகளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து, அதேநாள் இரவு 9.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக எஸ்சிடிஎஃப் படை தெரிவித்தது. அதனைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

வாகனங்களில் சிக்கியிருந்த மூவரைக் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றினர். விபத்து துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர்ராஜா விரைவுச் சாலையில், கார்ப்பரேஷன் ரோட்டை நோக்கிச் செல்லும் துணைச் சாலைக்கு முன்பாக நடந்தது.

அறுவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மேலும் 11 பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஃபேஸ்புக் காணொளி

ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டக் காணொளியில், பல வாகனங்கள் விரைவுச்சாலையின் இடப்பக்கமாக நிறுத்தப்பட்டிருந்தன. மற்ற வாகனங்களும் செல்லமுடியாத வகையில் தடுக்கப்பட்ட அந்த இரு சாலைத் தடங்களில் இருந்த அவற்றில் மருத்துவ உதவி வாகனங்களும் தீயணைப்பு வண்டியும் அடங்கும்.

காவல்துறையினர் போக்குவரத்துக்கு வழிகாட்டிய நிலையில் குடிமைத் தற்காப்புப் படையினர் காயமடைந்தோருக்கு உதவியது காணொளியில் தெரிந்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துஆயர் ராஜா விரைவுச்சாலைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைமருத்துவமனைசிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்சிகிச்சை