ஆயர் ராஜா விரைவுச்சாலை விபத்து; குப்புறக் கவிழ்ந்த கார்

1 mins read
a8685441-1bff-45f7-940c-9938433b9658
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜனவரி 21) இரவு ‘டிப்பர்’ லாரியுடன் மோதிய கார் குப்புறக் கவிழ்ந்தது. - படம்: ஏஷியாஒன்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜனவரி 21) இரவு ‘டிப்பர்’ வகை லாரியும் காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 7.40 மணியளவில் மரினா கோஸ்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில், கிளமெண்டி அவென்யூ 2 வெளியேறும் பாதைக்கு முன்பாக இவ்விபத்து நடந்ததாக ஏஷியாஒன் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவ இடத்தில், ராணுவச் சீருடை அணிந்த ஒருவர் குப்புறக் கவிழ்ந்து கிடந்த சிவப்பு நிற காருக்கு அருகே காணப்பட்டதாக அது கூறியது. சாலையின் மூன்றாம் தடத்தில் அந்த கார் கவிழ்ந்து கிடந்தது.

அதற்கு அருகில், ‘டிப்பர்’ லாரியும் மற்றொரு காரும் காணப்பட்டன. சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் இருவரும் இந்த விவகாரத்திற்குத் தனிப்பட்ட முறையில் தீர்வுகாண இணக்கம் கண்டதாகத் தெரிகிறது.

விபத்தால் பொதுச் சொத்துக்குப் பாதிப்பு ஏதுமில்லை என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்