‘பி’ பிரிவுக்கான வாகன உரிமைச் சான்றிதழின் (சிஓஇ) கட்டணம் 8.8 விழுக்காடு குறைந்தது. புதன்கிழமை (பிப்ரவரி 4) அந்தத் தகவல் வெளியிடப்பட்டது. அதேபோல் மற்ற வாகனப் பிரிவுச் சான்றிதழ்களுக்கான கட்டணமும் குறைந்துள்ளது.
சிறிய மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் ஆகியவற்றிற்கான ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் $106,320ஆக உள்ளது.
இதற்கு முன் ஜனவரி 21ஆம் தேதி வெளியான அறிவிப்பில் அது $109,501ஆக இருந்தது.
பெரிய, அதிக சக்திவாய்ந்த கார்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான ‘பி’ பிரிவு ‘சிஓஇ’ கட்டணம் $121,634லிருந்து $110,890ஆகக் குறைந்தது.
பொதுப் பிரிவில், அதாவது ‘இ’ பிரிவில், வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் கிட்டத்தட்ட நான்கு விழுக்காடு குறைந்து $116,000 என்று பதிவானது.
வர்த்தக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவுச் சான்றிதழுக்கான கட்டணம் $74,801 ஆகப் பதிவானது. இதற்கு முன்பு அது $75,202ஆக இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட 0.5 விழுக்காடு குறைவு.
மோட்டார்சைக்கிளுக்கான ‘டி’ பிரிவு ‘சிஓஇ’ கட்டணம் 6.4 விழுக்காடு குறைந்தது. $8,860லிருந்து $8,289 ஆக அது பதிவானது. அதாவது 6.4 விழுக்காட்டுச் சரிவாகும்.

