இரு லிட்டில் இந்தியா உணவகங்களுக்குத் தற்காலிகத் தடை

1 mins read
5455d575-f3aa-418b-a0ef-983e2b9c833e
தூய்மை தொடர்பான விதிமுறைகளைப் பூர்த்திசெய்யாததால் இரண்டு உணவகங்களுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. - படங்கள்: கூகல் நிலப்படம்

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அமைந்துள்ள இரண்டு பிரபல உணவகங்ககளுக்கு இரண்டு வாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவை இரண்டும் தூய்மை தொடர்பான விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாதது அதற்குக் காரணம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) தெரிவித்தது.

ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருக்கும் பனானா லீஃப் அப்போலோ, ரோவெல் ரோட்டில் இருக்கும் ‌ஷாஹி பிரியாணி ஹவுஸ் ஆகிய உணவகங்கள் வெள்ளிக்கிழமை முதல் இம்மாதம் 21ஆம் தேதிவரை மூடப்பட வேண்டும். அதோடு, பனானா லீஃப் அப்போலோவுக்கு 1,000 வெள்ளியும் ‌ஷாஹி பிரியாணி ஹவுசுக்கு 1,100 வெள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

உணவகத்தையும் அங்கிருக்கும் சாதனங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, சுத்தமற்ற உணவை விற்றது ஆகிய காரணங்களுக்காக பனானா லீஃப் அப்போலோ ஓராண்டு காலத்தில் 14 தண்டனைப் புள்ளிகளைப் பெற்றது (demerit points).

சுத்தமாக உணவகத்தை வைத்துக் கொள்ளாதது, ஊழியர் ஒருவரைப் பதிவு செய்யாதது போன்ற காரணங்ளுக்காக ஷாஹி பிரியாணி ஹவுஸ், ஓராண்டு காலத்தில் 16 தண்டனைப் புள்ளிகளைப் பெற்றது.

12க்கும் அதிகமான தண்டனைப் புள்ளிகளைப் பெறும் உணவகங்கள், இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்குத் தடைசெய்யப்படலாம் அல்லது அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்