காதலனுக்காக வங்கிக் கணக்கு; 75வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை

காதலனுக்காக வங்கிக் கணக்கு; 75வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை

2 mins read
ed8749a9-6a19-497a-a59a-d962e9dda090
சட்டவிரோதமாக வங்கி கணக்கு தொடங்கி காதலனுக்கு உதவிய மூதாட்டி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாட்ஸ் ஆப் செயலி மூலம் அறிமுகமான தமது காதலனுக்கு உதவி செய்யும் நோக்கில் வங்கிக் கணக்குத் தொடங்கிய 75 வயது மூதாட்டிக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

காங் பூ ஹுவா (படம்) என்ற அந்த மூதாட்டி காதலுனுக்காகத் தொடங்கிய வங்கி கணக்கில் கிட்டத்தட்ட 260,000 வெள்ளி பெற்றார். அந்தப் பணம் சந்தேகத்திற்குரிய முறையில் சம்பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 

மேலும் அந்த வங்கி கணக்கின் ‘ஏடிஎம்’ அட்டையை தான் தொலைத்துவிட்டதாகவும் அந்த மூதாட்டி காவல்துறையிடம் பொய் கூறினார்.

ஆனால் அந்த ‘ஏடிஎம்’ அட்டையை மூதாட்டி அவரது காதலனிடம் கொடுத்தது விசாரணையில் பின்னர் தெரியவந்தது. 

ஜான் லீ மரினா என்ற அழைக்கப்படும் அந்த காதலன் குறித்து வேறு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

மேலும் அந்த மூதாட்டி 20,000 வெள்ளி மோசடியால் இழந்தார்.

மூதாட்டி பல உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தமது கணவருடன் வாழ்ந்து வருகிறார், அதனால் அவருக்கு எச்சரிக்கை அல்லது அதிகபட்சமாக இரண்டு வாரம் வரை சிறைத் தண்டனை விதிக்குமாறு  அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரினார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி, மூதாட்டி  ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டினார்.  அதனால் அவருக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிப்பதாக அவர் தெரிவித்தார். 

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மூதாட்டி ஒப்புக்கொண்டார்.

மூதாட்டி தமது காதலன் கேட்டபடி அங் மோ கியோவில் உள்ள ஐசிபிசி வங்கியில் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கைத் தொடங்கினார்.

அதன்பின்னர் ‘ஏடிஎம்’ அட்டையை அந்த ஆடவருக்கு அஞ்சல் மூலம் அனுப்பினார்.

2021, டிசம்பர் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரை அந்த வங்கிக் கணக்கில் 260,000 பணம் போடப்பட்டது.

மூதாட்டியின் குற்றச்செயல்கள் 2023ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின்னர் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

குறிப்புச் சொற்கள்
கைதுமோசடிநிதி மோசடி