பிடோக் நார்த் அவென்யூ 1ல் வழக்கத்துக்கு மாறான காட்சி ஒன்று பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆடவர் ஒருவர் வெறுங்காலுடன் சாலையில் வலம் வந்தார். அவ்வழியாகச் சென்ற வாகனங்களை நோக்கி அவர் நடந்தார். அவற்றைத் நிறுத்தவும் துரத்தவும் அவர் முயன்றார்.
இச்சம்வவம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி காலை 8.27 மணிக்கு நிகழ்ந்தது.
விநியோக ஊழியர் ஒருவர் ஓட்டிய மோட்டார் சைக்கிளை அந்த ஆடவர் நோக்கிச் சென்றதை வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகள் காட்டின.
அந்த விநியோக ஊழியரிடம் அந்த ஆடவர் எதையோ சொல்வதைக் காணொளியில் காண முடிந்தது.
அந்த விநியோக ஊழியர் தமது வாகனத்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு பிறகு அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
போக்குவரத்து சற்று அதிகமாக இருந்ததால் கேமரா பொருத்தப்பட்ட வாகனமும் மற்ற வாகனங்களும் அவ்விடத்தில் சற்று நேரம் நிறுத்தப்பட்டன.
அப்போது கேமரா பொருத்தப்பட்ட சிவப்பு நிற டொயோட்டா காரை நோக்கி அந்த ஆடவர் தட்டுத் தடுமாறி நடப்பதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவர் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமராவைப் பார்த்து தமது கையை நீட்டி காரை நிறுத்தும்படி செய்கை காட்டினார்.
அவரது வினோதமான செயலைக் கண்டு அந்த காரின் ஓட்டுநர் அங்கிருந்து ஓட்டிச் சென்றார்.
வெறுங்காலுடன் வலம் வந்த ஆடவரின் விசித்திரமான செயலைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த ஆடவர் மதுபோதையில் இருந்திருக்கக்கூடும் அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருக்கக்கூடும் என்று இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
விசாரணை தொடர்கிறது.

