கிராஞ்சி எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களைக் குறிவைத்து பாலியல் சேவை

2 mins read
29881633-964a-463d-a8c5-b930b2282051
கிராஞ்சி எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் காணப்படும் ஒடுக்கமான பாதையின் நுழைவாயில். - படம்: ஷின் மின்

கிராஞ்சி எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதி ஒன்று, வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்க சட்டவிரோத பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சேவை வழங்கும் இடமாக உருவெடுத்துள்ளது.

கார் தொழிற்சாலை ஊழியரான ஸாங் என்பவர், கடந்த வாரயிறுதியில் அந்தக் காட்டுப்பகுதி வழியாக தாம் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வடிகாலுக்குப் பக்கத்தில் உள்ள பாதையின் வாயிலில் இரு உயரமான, “அழகான பெண்கள்” நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததாக ஷின் மின் சீன செய்தி நாளிதழிடம் கூறினார்.

“அவர்கள் என்னிடம் கையசைத்து அழைத்தனர். வாடிக்கையாளர்களை அவர்கள் தேடுவது நன்றாகத் தெரிந்தது,” என்றார் அந்த ஆடவர்.

இரவில் வெளிநாட்டு ஊழியர்கள் அப்பகுதியில் சுற்றித் திரிவதை தாம் அடிக்கடி பார்த்ததாகச் சொன்ன அவர், அந்தக் காட்டுப்பகுதியில் ரகசிய விலைமாதர் விடுதி ஒன்று இருப்பதாகக் கருதினார்.

இந்த விவகாரம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஷின் மின் செய்தியாளர் ஒருவர், வியாழக்கிழமை (செப்டம்பர் 12) ஸாங்கின் பாதையைத் தேடிச் சென்றார். இரவு 9 மணியளவில் வடிகால் ஓரமாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் நின்றுகொண்டிருந்ததை அவர் கண்டார். தம்மைச் சுற்றி அவர் யாரையோ தேடிக் கொண்டிருந்தது தெரிந்தது.

பின்னர், இரவு 10 மணியளவில் அச்செய்தியாளர் அந்த இடத்துக்குத் திரும்பினார். அப்போது அரைகுறை உடைகள் அணிந்திருந்த இரு “அழகான பெண்களை” வெளிநாட்டு ஊழியர்கள் சூழ்ந்திருந்ததை அவர் பார்த்தார். பிறகு, அந்தப் “பெண்களில்” ஒருவரும் ஊழியர் ஒருவரும் புதருக்குள் சென்றனர்.

“சிறப்புச் சேவைகள் வழங்குகிறீர்களா?” என அவ்விருவரிடமும் அச்செய்தியாளர் கேட்டதற்கு, “அப்பெண்களில்” ஒருவர் ஆரம்பத்தில் மறுத்தாலும் பின்னர் அதை ஒப்புக்கொண்டார். தாங்கள் “பெண்களின் உடை அணிந்துள்ள ஆண்கள்” என அவர்கள் பகிர்ந்தனர்.

இது “பாதுகாப்பானதா” என அச்செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, அந்தப் பாலியல் தொழிலாளர் உடனடியாக ஆணுறை ஒன்றைக் காட்டினார்.

“நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் இலவசமாக ஆணுறைகளை வழங்குகிறோம். ஆணுறை இல்லாமல் நாங்கள் சேவை வழங்க மாட்டோம்,” என்று அவ்விருவரும் கூறினர்.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் $20 செலவாகும் என்றும் பின்னால் உள்ள புதருக்குள் நடவடிக்கை இடம்பெறும் என்றும் அவர்களில் ஒருவர் சொன்னார்.

அந்தத் தருணத்தில் புதரில் நான்கு, ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் காத்திருந்ததாக ஷின் மின் தெரிவித்தது.

ஒதுக்குப்புறமான பாதையின் முடிவில் உள்ள சிறியதோர் இடம்.
ஒதுக்குப்புறமான பாதையின் முடிவில் உள்ள சிறியதோர் இடம். - படம்: ஷின் மின்

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை அச்செய்தியாளர் மீண்டும் அவ்விடத்துக்குச் சென்றார். முதல் நாள் இரவு வெளிநாட்டு ஊழியர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் ஒடுக்கமான பாதை ஒன்று இருந்ததைக் கண்டறிந்தார்.

ஒடுக்கமான பாதையின் முடிவில் உள்ள சிறியதோர் இடத்தில், பயன்படுத்தப்பட்ட மெல்லிழைத்தாள்கள், கிட்டத்தட்ட நூறு ஆணுறைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பான டின்கள், மது போத்தல்கள் உள்ளிட்டவை காணப்பட்டன.
ஒடுக்கமான பாதையின் முடிவில் உள்ள சிறியதோர் இடத்தில், பயன்படுத்தப்பட்ட மெல்லிழைத்தாள்கள், கிட்டத்தட்ட நூறு ஆணுறைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பான டின்கள், மது போத்தல்கள் உள்ளிட்டவை காணப்பட்டன. - படம்: ஷின் மின்

அந்தப் பாதையின் முடிவில் உள்ள சிறியதோர் இடத்தில், பயன்படுத்தப்பட்ட மெல்லிழைத் தாள்கள், கிட்டத்தட்ட நூறு ஆணுறைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பான டின்கள், மது போத்தல்கள் உள்ளிட்டவை காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்