எரிபொருள், மின்கலன் இரண்டையும் கலந்து உபயோகிக்கும் 1.5 மில்லியன் வெள்ளி மின்சார காரை (Hybrid EV) ஆடம்பர கார் உற்பத்தியாளர் பென்ட்லி, சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது கார்களில் ஆக வேகமாகச் செல்லக்கூடிய வடிவத்தின் ‘ஹைபிரிட்’ வடிவத்தை பென்ட்லி புதன்கிழமையன்று (நவம்பர் 20) சிங்கப்பூரில் அறிமுகமானது. இது மணிக்கு 335 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது.
இது ‘பிளக்-இன் ஹைபிரிட்’ (Plug-in hybrid) மின்சார கார் என்பதால் இதற்கு நேரடியாக மின்னூட்டலாம். வெறும் மின்சக்தியாலேயேகூட அதனால் இயங்கமுடியும்.
2022ல் அறிமுகமான ‘ஃப்லையிங் ஸ்பர்’ (Flying Spur) மின்சார காரை அடுத்து, இதுவே பென்ட்லி சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தும் இரண்டாம் ‘பிளக்-இன் ஹைபிரிட்’ மின்சார கார்.
இக்காரில் இரு வகைகள் உள்ளன. ஒன்று $1,538,000 வெள்ளிக்கு விற்பனையாகிறது. மற்றொன்று S$1,688,000 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இவ்விலை வாகன உரிமச் சான்றிதழை உள்ளடக்கவில்லை.