சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு ஆகச் சிறந்த இடங்களின் பட்டியலில் சாங்கி விமான நிலையக் குழுமம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ரேன்ஸ்டெட் (Randstad) எனும் ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் மூன்றாவது முறையாக சாங்கி விமான நிலையக் குழுமம் முதல்நிலையில் வந்துள்ளது.
ஊழியர்கள், வேலை தேடுவோர் என 18 வயதிலிருந்து 24 வயதுக்கு இடைப்பட்ட 2,522 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
2016, 2018 ஆம் ஆண்டுகளிலும் சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு ஆகச் சிறந்த இடமாக சாங்கி விமான நிலையக் குழுமம் திகழ்ந்தது.
சாங்கி விமான நிலையக் குழுமத்துக்கு அடுத்த நிலையில் மரினா பே சேண்ட்ஸ், புராக்டர் அண்ட் கேம்பல் ஆகியவை வந்தன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் நான்காம் இடத்தைப் பிடித்தது. முதன்முறையாகப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஓசிபிசி வங்கி ஒன்பதாவது இடத்தில் வந்தது. யூஓபி 14ஆம் இடத்தில் வந்தது.
சிங்கப்பூரில் உள்ள துறைகளில் விருந்தோம்பல், பொழுதுபோக்குத் துறைகள் ஆக கவர்ச்சிகரமான துறைகளாக வகைப்படுத்தப்பட்டன.
உயிர்அறிவியல் துறை இரண்டாம் இடத்திலும் பாதுகாப்பு, உணவு விநியோகம் ஆகிய சேவைத் துறை மூன்றாம் இடத்திலும் வந்தன.