பிஎச்ஜி கடைக்கு இனி மூன்று மாடிகள் இல்லை

பிஎச்ஜி கடைக்கு இனி மூன்று மாடிகள் இல்லை

2 mins read
d30dcfa8-3e4f-435f-8993-fc862f4fc157
பீஷானிலுள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் மட்டுமின்றி, பிஎச்ஜியின் மற்ற பல கிளைகளும் அண்மையில் மூடப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிஎச்ஜி (BHG) பல்துறை அங்காடி, ‘பூகிஸ் ஜங்ஷன்’ கடைத்தொகுதியிலுள்ள தனது கிளையின் பரப்பளவைக் குறைத்துள்ளது.

இதுவரை மூன்று மாடிகளைக் கொண்டிருந்த அதன் கடைசி கிளைக்கு இனி இரண்டு மாடிகள் மட்டுமே எஞ்சி இருக்கும்.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ஜங்ஷன் 8லுள்ள கடைத்தொகுதியில் அதன் கிளை மூடப்பட்டதை அடுத்து அங்கு வீட்டு அறைகலன்களை விற்கும் ‘நிட்டோரி’ செயல்படும்.

பூகிஸ் ஜங்ஷன் கிளையின் மூன்றாவது மாடி, தற்போது ஜப்பானிய நிறுவனம் மூஜிக்கு விடப்பட்டுள்ளது.

பீஷானிலுள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதியில் மட்டுமின்றி, பிஎச்ஜியின் மற்ற பல கிளைகளும் அண்மையில் மூடப்பட்டுள்ளன.

ஜன்ஷன் 8 மட்டுமின்றி ராஃபில்ஸ் சிட்டி கடைத்தொகுதி, ஜூரோங் பாயிண்ட், கிளமெண்டி மால், லாட் ஒன் ஆகிய இடங்களில் உள்ள கிளைகள் 2022 முதல் மூடப்பட்டு வந்தன.

மற்ற பல்துறை அங்காடிகளின் மூடல்களுக்கு இடையே இந்த மூடலும் நிகழ்கிறது.

பூகிஸ் ஜங்ஷனில் தொடர்ந்து குத்தகையாளராகத் திகழும் பிஎச்ஜியுடன் தொடர்ந்து செயலாற்றி புதிய வகையான பொருள்களை அறிமுகம் செய்ய அதனுடன் அணுக்கமாகப் பணியாற்றும் என்று பூகிஸ் ஜங்ஷனின் பேச்சாளர் தெரிவித்தார்.

மூடல் குறித்து எதுவும் கூற பிஎச்ஜி மறுத்துள்ளது.

செய்யூ விங் ஓன் டிபார்ட்மண்ட் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் 1994 முதல் செயல்படத் தொடங்கி பிஎச்ஜி, 2007ல் சீனப் பெருநிறுவனமான பெய்ஜிங் ஹுவாலியன் குழுமத்தால் வாங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிஎச்ஜி என்ற பெயரில் அந்த வர்த்தகம், கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது.

இணைய வர்ததங்கள் தரும் போட்டியால் உள்நாட்டிலும் உலகெங்கிலும் பல்துறை அங்காடிகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கொவிட் 19 கிருமித்தொற்று இந்தப் பிரச்சினையை மேலும் கடுமையாக்கியது.

ஜப்பானிய நிறுவனம் இசேடான், வரும் நவம்பரில் தெம்பனிஸ் கடைத்தொகுதியிலுள்ள தனது கிளையை முப்பப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மூடவுள்ளது.

உள்ளூர் நிறுவனமான ஓஜி, 18 ஆண்டுகள் நீடித்த செயல்பாடுகளுக்குப் பிறகு 2022ல் தனது ஆர்ச்சர்ட் கிளையை மூடியது. தற்போது அதன் இரண்டு கிளைகள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன.

ராபின்சன் நிறுவனத்திற்கு இணைய வர்த்கம் மட்டுமே உள்ளது.

குறிப்புச் சொற்கள்