லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் மீன்பிடித் தூண்டிலில் சிக்கிய பறவை மீட்பு

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் மீன்பிடித் தூண்டிலில் சிக்கிய பறவை மீட்பு

1 mins read
f4a6d75a-94df-49e6-bf00-c21c78aea100
பறவை சிக்கிய சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஏக்கர்ஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தின் கரையை ஒட்டியிருந்த மரக்கிளையில் சிக்கியிருந்த மீன்பிடித் தூண்டில் ஒன்றில், புலம்பெயர்ந்த பறவை ஒன்று சிக்கிக்கொண்டது. ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) அதிகாலை அந்தப் பறவை பத்திரமாக மீட்கப்பட்டது.

காலை 7 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அங்கு சென்றபோது, ‘ஏஷியன் ஓப்பன்பில்’ வகை என நம்பப்படும் அந்தப் பறவை, மரத்தில் தொங்கியபடி பலவீனமாகத் தனது இறக்கைகளை அடித்துக்கொண்டிருந்தது.

காலை 7.30 மணியளவில் அங்குள்ள உள்ளூர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்த மீன்பிடித் தூண்டிலை வெட்டி, பறவையைப் பத்திரமாக மீட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ஏக்கர்ஸ் அமைப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்