நீண்டகால வாடகை கார்களாக உருமாறும் புளூஎஸ்ஜி கார்கள்

1 mins read
df58890c-abcf-4f0a-b3de-5c737620a85d
டிரைப்கார் இரண்டு ஆண்டுகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட புளூஎஸ்ஜி கார்களை வாங்கவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புளூஎஸ்ஜி (BlueSG) கார்ப் பகிர்வுச் சேவைக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று கதவுகளைக் கொண்ட மின்சார கார்கள் வாடகை வாகனங்களாக உருமாறவிருக்கின்றன.

புளூஎஸ்ஜியின் பகிர்வுச் சேவை இம்மாதம் (ஆகஸ்ட் 2025) 8ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அடுத்த இரண்டு வாரங்களில் அது மீண்டும் சாலைகளில் இயங்கவிருக்கிறது.

அதன் கார்களை டிரைப்கார் எனும் மற்றொரு கார்ப் பகிர்வுத் தளம் வாங்கவிருக்கிறது.

புளூஎஸ்ஜி கார்கள் ‘ல புளூ ஃபிரெஞ்ச்சி’ (Le Blu Frenchy) என்று பெயர்மாற்றம் காணும். டிரைப்காரிடமிருந்து அதனை மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாடகைக்கு எடுக்கலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தொடர்புகொண்டு கேட்டபோது, புளூஎஸ்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்த் கீ அதனை உறுதிப்படுத்தினார். மின்சார கார்களின் உத்தேச விற்பனை குறித்து டிரைப்காருடன் பேசிவருவதாக அவர் சொன்னார்.

மின்சார கார்களை நெடுங்காலம் பயன்படுத்துவது நோக்கம் என்று திரு கீ கூறினார்.

புளூஎஸ்ஜி சேவைக்கான கார்கள், பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாகன உரிமைச் சான்றிதழ்களுடன் பதிவுசெய்யப்பட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட வாகனங்களை டிரைப்கார் வாங்கும். அதே நேரம் அவை சாலைகளில் பயணம் செய்த தொலைவு 50,000 கிலோமீட்டருக்கும் கிட்டத்தட்ட 100,000 கிலோமீட்டருக்கும் இடைப்பட்டதாக இருக்கவேண்டும் என்று டிரைப்காரின் இணை நிறுவனர் அட்ரியன் லீ தெரிவித்தார்.

சென்ற ஆண்டு (2024) இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் புளூஎஸ்ஜியிடம் 692 கார்கள் இருந்தன.

குறிப்புச் சொற்கள்