செந்தோசா கடற்கரையில் அசைவின்றிக் கிடந்த 22 வயது ஆடவரின் உடல்

செந்தோசா கடற்கரையில் அசைவின்றிக் கிடந்த 22 வயது ஆடவரின் உடல்

1 mins read
சந்தேகப்படும்படி எதுவும் இல்லை: காவல்துறை
f90007f5-1efc-493a-85f2-6516113b7e09
சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட புகைப்படத்தில், சிலோசோ கடற்கரையில் காவல்துறை அதிகாரிகள் நீலநிறக் கூடாரத்தைச் சுற்றி நிற்பது காணப்பட்டது. - படம்: XIAOHONGSHU சமூக ஊடகம்

செந்தோசாத் தீவில் உள்ள சிலோசோ கடற்கரையில் வெள்ளிக்கிழமை (மே 15) மதியம் 22 வயது ஆடவர் ஒருவரின் உடல் அசைவின்றிக் கிடந்தது.

எண் 10, சிலோசோ பீச் வாக் எனும் முகவரியில் இயங்கும் ‘ட்ரபீஸா’ என்ற இத்தாலிய உணவகத்தில் இருந்து அதே நாளில் மதியம் 1.40 மணியளவில் உதவிக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தன.

சம்பவ இடத்தை அடைந்த எஸ்சிடிஎஃப் மருத்துவ உதவி அதிகாரிகள் அந்த ஆடவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.

‘சியாவ்ஹொங்ஷு’ எனும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட புகைப்படத்தில் கடற்கரையோரத்தில் ஆடவரின் உடலை மூடியிருந்த நீலநிற கூடாரத்தைக் காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்பதைக் காணமுடிந்தது.

முதற்கட்ட விசாரணை

விசாரணை தொடர்கிறது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்தில் எதுவும் நடந்ததற்கான ஆதாரம் முதற்கட்ட விசாரணையில் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், செந்தோசா மேம்பாட்டுக் கழகத்தையும் இத்தாலிய உணவகத்தையும் மேல் விவரங்களுக்குத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்