ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே நீரிலிருந்து 62 வயது ஆடவரின் உடல் மீட்பு

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே நீரிலிருந்து 62 வயது ஆடவரின் உடல் மீட்பு

1 mins read
8527e09e-e3bd-42fa-8b47-4642a303f486
சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

நீரில் மூழ்கியதாகச் சந்தேகிக்கப்படும் 62 வயது ஆடவரின் உடல் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே உள்ள கடற்பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 12) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறை, உதவி கோரி பிற்பகல் 3 மணிக்கு தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறியது. அந்த ஆடவரின் உடல் கடற்பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. அவர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் சூது இருப்பதாகச் சந்தேகமில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை சொன்னது. இதுகுறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்