தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட்டில் ஏறும்போது தவறி விழுந்தவரின் நல்லுடல் தாயகம் திரும்பியது

1 mins read
a08facc5-3714-4c93-9fba-bd87a4dea2ce
திரு ஹேரி டானின் இறுதிச் சடங்கு அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது தவறி விழுந்து மாண்ட சிங்கப்பூரர் ஹேரி டான் எங் குவாங்கின் நல்லுடல் அக்டோபர் 9ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தது.

ஓய்வுபெற்ற ஆசிரியரான அவருக்கு வயது 76. திரு டானின் நல்லுடல் ஓல்ட் சுவா சூ காங் ரோட்டிலுள்ள ‘த கார்டன் ஆஃப் ரிமம்பரன்ஸ்’ல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று குடும்பத்தினர் கூறினர். அக்டோபர் 12ஆம் தேதி அவரது இறுதிச் சடங்கு நடைபெறும்.

செப்டம்பர் 26ஆம் தேதி நேப்பாளத்தின் கொங்மா லா கணவாய் அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமற்போனார்.

ஒரு வாரத்துக்குமேல் நீடித்த தேடல், மீட்புப் பணிகளை அடுத்து அக்டோபர் 4ஆம் தேதி அவரது சடலம் மீட்கப்பட்டது.

தேசியக் கல்விக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான அவரது மனைவி டாக்டர் ஜெஸ்ஸி ப்ங், தமது கணவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் எப்போதும் தம்மைச் சுற்றியுள்ளவர்களின் கவலைகளைச் செவிமடுக்கும் பழக்கமுடையவர் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்